பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நூறாவது நாள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் ஊராட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரும் நிலையில் இன்று நூறாவது நாள் முன்னிட்டு பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் தலைமையில் தனியார் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டு பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100வது நாள் கண்டுகளிக்கும் வகையில் மிகப்பெரிய எல் இ டி திரையில் பார்த்து கேட்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு வகையான தொழில்கள் குறித்து அவர்கள் முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் டிஜிட்டல் இந்தியா குறித்து பிரதமரின் உரையை கேட்டு அறிந்து கண்டு களித்தனர். அந்த வகையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ஒளிபரப்பான நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி வரவேற்று மகிழ்ச்சி உற்றனர்.
இவ்வாறு மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் நேரடியாக உரையாற்றுவது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றும், கிராமபுற, நகர்ப்புற மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும் இவற்றை பொதுமக்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் கண்டு களிக்கும் வகையில் விஷார் ஊராட்சியில் எல்இடி திரை கொண்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமாருக்கு பொதுமக்கள் தனது பாராட்டினை தெரிவித்தனர்.