அரசியல் இலங்கை செய்தி

பிரதமரிடமிருந்து கல்வி அமைச்சு பறிப்பு?

பிரதமரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படமாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath திட்டவட்டமாக அறிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தில் பிரதமராக செயல்படும் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya வசமே கல்வி அமைச்சும் இருக்கின்றது.

இந்நிலையில் தரம் 6 ஆங்கில பாட புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்படவுள்ளது.

எனவே, பிரதமர் வசம் இருக்கும் கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வருமா என வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“ பிரதமரை நாம்தான் நியமித்தோம். அவர் அப்பதவியில் நீடிப்பார். அதில் எவ்வித மாற்றமும் வராது. கல்வி அமைச்சும் அவர் வசமே இருக்கும்.

கல்வி மறுசீரமைப்பென்பது பாரிய பணியாகும். இதில் ஒரு இடத்தில் இடம்பெற்ற வலுவை அடிப்படையாகக்கொண்டு பிரதமரை இலக்கு வைப்பது ஏற்புடையது அல்ல.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!