பாரிஸில் புகலிடக்கோரிக்கை வழங்குமாறு கோரி வீதிக்கு இறங்கிய அகதிகள்
பாரிஸில் அகதிகள் சிலர் செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புகலிடக்கோரிக்கையை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக இரவு 9.30 மணி அளவில் அகதிகள் ஒன்றிணைந்தனர்.
150 இல் இருந்து 200 வரையான அகதிகளும், அவர்களுடன் அகதிகளுக்கான பாதுகாப்பு தொண்டு நிறுவனமான Utopia56 இனைச் சேர்ந்த அதிகாரிகளுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்களுக்கான புகலிடக்கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பின்னர் அவர்கள் அங்கேயே கூடாரங்கள் சிலவற்றை அமைத்தனர். ‘எங்களுக்குரிய தீர்வு தரும்வரை இங்கேயே தங்கி விட தீர்மானித்துள்ளோம்!” என அகதிகள் குறிப்பிட்டனர்.
(Visited 1 times, 1 visits today)