செய்தி தமிழ்நாடு

பள்ளி ஆண்டு விழா-மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ள தொழுப்பேடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆலம் இன்டர்நேஷ்னல் பள்ளியில், இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் பள்ளியின் முதல்வர் வி.சி.சுமித்தா அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.

ஆண்டு முழுவதும் பள்ளி சார்பில் செய்யப்பட்டிருந்த பணிகள் மற்றும் மாணவர்கள் செய்த சாதனைகள் ஆண்டு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர்  கே.ஜெயசங்கர், ஆலம் பள்ளி நிறுவனர் கே.ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பள்ளியில் நடத்தப்பட்ட ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, ஓட்டப்பந்தயம், கபடி, நடனம்,

உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும்

பள்ளி சார்பாக நடைபெற்ற போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ மாணவிகள் மேடையில் தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

மேலும் பள்ளி மழலைச் செல்வங்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்திக் பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்களை அசத்தினர்.

இதில் ஆலம் இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!