பலாலியில் தரை இறங்கிய அமெரிக்க வான்படை சரக்கு வானூர்தி.
BY AJ
December 8, 2025
0
Comments
48 Views
யாழ்ப்பாணம் சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமெரிக்காவின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமரிக்காவின் US Air Force C-130Js வான்படை சரக்கு வானூர்தி இன்று தரையிறங்கியது.
அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் நேற்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன.
நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த விமானம் வடக்குக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து இன்றைய தினம் அமெரிக்க வான்படை சரக்கு வானூர்தி பலாலி வானூர்தி நிலயத்தில் தரை இறங்கியது.
இந்த அணி இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை