செய்தி வட அமெரிக்கா

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறிய அதிபர் ஜோ பைடன்..!(வீடியோ)

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (SVB) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதிஅமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன இந்த நிலையில்,இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம் வங்கிகள் சரிவைச் சந்திருக்கின்றன.. என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா… இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார். ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் வைரலாகி வருகிறது.

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி