பதுளையில் ‘ஒரு மில்லியன் தன்னார்வலர்கள்’ திட்டம்: 1000 இளைஞர்கள் களத்தில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒரு மில்லியன் தன்னார்வலர்கள் (One Million Volunteers) வேலைத்திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் பிரம்மாண்ட சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சுமார் 1000 தன்னார்வ இளைஞர்கள் பங்கேற்கும் இத்திட்டத்தின் மூலம், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைத்தல், வீதிகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகமும் இடம்பெறவுள்ளன.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, சிலாபத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இது பதுளையில் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்கள் volunteer.nysc.lk என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





