இந்தியா செய்தி

பஞ்சாப்பில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பாலை தேடும் பணியில் இதுவரை 100ற்கும் மேற்பட்டோர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடும், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரீத் பால்சிங்கின் கூட்டாளி லவ்பிரீத் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அம்ரீத் பால்சிங் ஆதரவாளர்கள் போலீஸ் நிலைத்தை சூறையாடினர். இதைத்தொடர்ந்து அம்ரீத் பால்சிங்கை கைது செய்ய  பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அம்ரீத் பால்சிங் ஆதரவாளர்கள் போலீஸ் நிலைத்தை சூறையாடினர். இதைத்தொடர்ந்து அம்ரீத் பால்சிங்கை கைது செய்ய  பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவரை வாகனத்தின் விரட்டி சென்றபோது, காரில் தப்பிச்சென்ற அம்ரீத் பால்சிங் ஜலந்தர் பகுதியில் வேறு ஒரு வாகனத்திற்கு மாறி தப்பினார். அவரை பிடிக்க 3வது நாளாக தேடுதல் வேட்டையை பொலிசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் அம்ரீத் பால்சிங்கின் மாமா ஹரிஜித் சிங் மற்றும் டிரைவர் ஹர்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் குருத்வாரா அருகே  பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக ஜலந்தர் மாவட்ட  பொலிஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

இதில் ஹரிஜித் சிங் தான் அம்ரீத் பால்சிங் இருந்த காரை ஓட்டிச் சென்றுள்ளார். போலீசார் துரத்தும் போது தானும், அம்ரீத் பால்சிங்கும் பிரிந்து சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுவரை அம்ரீத் பால்சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 4 பேர் உள்பட அவரது ஆதரவாளர்கள் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதான அம்ரீத் பால்சிங்கின் முக்கிய கூட்டாளிகள் 4 பேர் விமானம் மூலம் அசாம் மாநிலம் பிப்ருகாருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதானவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி