பசுபிக் சமுத்திரத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
பசிபிக் சமுத்திரத்தில் இன்று 7.8 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பிராந்தியத்திலுள்ள நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
நியூ கலிடோனியாவின் லோயல்ட்டி ஐலண்ட்ஸ் தீவுகளுக்கு தென் கிழக்கில் 37 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்கப் பூகோள அளவையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பூகம்பத்தையடுத்து வனுவாட்டுவின் சில கரையோரங்களை 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும், பிஜி, கிரிபாட்டி, நியூஸிலாந்து கரையோரங்களில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் அடையக்கூடும் என அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்தது.
பசிபிக் சமுத்திரத்தில் ஏற்பட்ட இப்பூகம்பத்தினால் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.