பசிபிக் பெருங்கடலில் சூப்பர் டார்பிடோக்களை நிறுத்தும் ரஷ்யா!
பசிபிக் பெருங்கடலில் போஸிடான் அணுசக்தி திறன் கொண்ட சூப்பர் டார்பிடோக்களை சுமந்து செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க ரஷ்ய திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
போஸிடான், டார்பிடோக்களின் முதல் தொகுப்பை மொஸ்கோ ஜனவரியில் தயாரித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
குறித்த டார்பிடோ நீரிழ் இருந்து ஏவப்படும் ஒரு ட்ரோன் ஆகும். இவை பொதுவாக பெல்கோரோட் மற்றும் கபரோவ்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு வருகின்றன.
பசிபிக் பகுதியில் கடற்படையின் ஒருபகுதியாக நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
(Visited 2 times, 1 visits today)