ஐரோப்பா செய்தி

பக்முட்டில் 1000இற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த ரஷ்யா!

கடந்த சில நாட்களாக பக்முட் பகுதியில் போர்தீவிரமடைந்துள்ளது. சுமார் 1000 இற்கும மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குறித்த பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தனது இரவு நேர உரையில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மார்ச் மாதத்தின் முதல் ஒருவார காலப்பகுதிக்குள் பாக்முட் செக்டாரில் மட்டும் 1100இற்கும் மேற்பட்ட வீரர்களை கொல்ல முடிந்தாக குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் மீள முடியாது இழப்பு இதுவெனவும் அவர் விவரித்துள்ளார்.

சுமார் 1500இற்கும் மேற்பட்ட வீரர்கள் சுகாதார பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவித்த அவர், பலர் தங்களது சேவையில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் டொனெஸ்க் பகுதியில் 220இற்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி