ஆசியா செய்தி

நேபாளத்தில் இளைஞன் வயிற்றில் சிக்கியிருந்த போத்தல் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

நேபாளத்தில் இளைஞரின் வயிற்றில் இருந்து வொட்கா போத்தல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதுடைய இளைஞனுக்கு அறுவை சிகிச்சை மூலம் இந்த போத்தல் அகற்றப்பட்டுள்ளது.

நேபாளத்தில் குஜாரா நகராட்சியை சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவரின் வயிற்றில் போத்தல் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இரண்டரை மணித்தியால அறுவை சிகிச்சைக்கு பிறகு நுர்சத் மன்சூரியின் வயிற்றில் இருந்த வொட்கா போத்தலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

போத்தல் அவரது குடலைத் துண்டித்து, மலக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மன்சூரியின் நண்பர்கள் அவரைக் குடிக்க வைத்துவிட்டு, ஆசனவாய் வழியாக போத்தலை வயிற்றுக்குள் வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மன்சூரியின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி