நீதிமன்றத்தில் சரணடையும் டொனால்டு டிரம்ப் -வரலாறு காணாத பாதுகாப்பு!
கடந்த 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாச பட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்சுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்சை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரச்சார நிதிச் சட்டங்களை மீறியதற்காக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் டிரம்பே தெரிவித்தது பரபரப்பானது.ந்தநிலையில் அவர் விரைவில் சரணடைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தன்னை கைது செய்தது தவறு என்று அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னணியில் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த வழக்கு மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் சரணடைய டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதால் நியூயார்க் பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மன்ஹாட்டன் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ல. VIPக்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நீதிமன்றம் செல்லும் சாலைகளில் ஏராளமான ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.