நியூசிலாந்தில் சீக்கிய ஊழியர்கள் மீது இன துஷ்பிரயோகம்: மனித உரிமைகள் ஆணையத்தில் நிறுத்தப்பட்ட முதலாளி!
இன துஷ்பிரயோகம் தொடர்பாக முதலாளியை மனித உரிமைகள் ஆணையத்திற்கு நியூசிலாந்தில் உள்ள இரண்டு சீக்கிய டிரக் சாரதிகள் வரவழைத்துள்ளனர்.
சீக்கியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று அழைத்த நிறுவனத்தின் மேலாளரின் இன ரீதியான துஷ்பிரயோகத்திற்கு எதிராக நியூசிலாந்தில் உள்ள இரண்டு சீக்கிய டிரக் சாரதிகள் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
நிறுவனத்தின் மேலாளர் ரமிந்தர் சிங்கிடம் “சீக்கியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்” என்று கூறியதாக கூறப்படுகிறது, அதே போல நிறுவனத்தின் மற்றொரு சக ஊழியரான நந்த்புரியின் கலந்துரையாடலை தடுத்து சீக்கிய சமூகத்திற்கு எதிராக இழிவான வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார்.இதையடுத்து ரமிந்தர் சிங் மற்றும் சுமித் நந்த்புரி ஆகிய சதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் டோவிங்கின் முன்னாள் ஊழியர்கள் இருவர், மேலாளர் ஒருவரின் இன ரீதியான துஷ்பிரயோகம் தொடர்பான நிறுவனத்தின் உரிமையாளர் பாம் வாட்சனிடம் கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளனர், ஆனால் அவர் அதனை உரிய முறையில் கையாளாததால் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
புகார் குறித்து உரிமையாளர் பாம் வாட்சன் உரிய நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, இருவரும் மனித உரிமைகள் ஆணையத்தில் (HRC) புகார் அளித்துள்ளனர்.இந்த மாதம் இது தொடர்பான மத்தியஸ்த விசாரணையை நடத்தும், அதில் மனித உரிமைகள் ஆணையம் முடிக்க தவறினால், புகாரை மனித உரிமைகள் மறுஆய்வு தீர்ப்பாயத்திற்கு அனுப்பலாம் என்று மார்ச் 2, 2023 அன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை, மேலும் மேலாளரும் மன்னிப்பு கேட்கவில்லை. இது என்னை மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதித்துள்ளது ,” என அறிக்கையில் சிங் தெரிவித்துள்ளார்.நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த நந்தபுரி, தான் அங்கு அனுபவித்த 5வது இனவெறி சம்பவம் இது என்று தெரிவித்துள்ளார்.
உச்ச சீக்கிய சங்கத்தின் தல்ஜித் சிங், நியூசிலாந்தில் சீக்கியர்கள் பயங்கரவாதிகள் என்று யாரேனும் கூறுவது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.