“நமது மண்ணின் வரலாறு” – திரவுபதி 2 படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி நெகிழ்ச்சி
இயக்குனர் மோகன். ஜி-யின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திரவுபதி 2’ (Draupathi 2) திரைப்படம் திட்டமிட்டதை விட முன்னதாகவே பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது.
ரிச்சர்ட் ரிஷி (Richard Rishi), நட்டி நடராஜ் (Natty Natraj) மற்றும் ரக்ஷனா இந்துசுதன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் (Ghibran) இசையமைத்துள்ளார்.
முன்னதாக ஜனவரி 23-ஆம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி, நமது மண்ணின் வரலாற்றை இந்தத் தலைமுறை அறியும் வகையில் திரையில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது வீர வல்லாள மகாராஜாவையும் வீர சிம்ம காடவராயரையும் வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





