செய்தி வட அமெரிக்கா

தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட மாயன் கால ஸ்கோர்போர்ட்!

மெக்சிகோவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டான பெலோட்டாவின் ஸ்கோர்போர்ட்டினை கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த பெலோட்டா விளையாட்டிற்கென பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் நம்பும் சிக்கலான முறையில் செதுக்கப்பட்ட கல்லானது மிகவும் பழமை வாய்ந்த மாயா மக்களின் நாகரிகத்கிற்கே உரியது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்ட வடிவ கல்லானது சிச்சென் இட்சா தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் குறைந்தது 1,200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதன் மையத்தில் ஹைரோகிளிஃபிக் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.மற்றும் அதனை சூழப்பட்ட விரிவான தலைக்கவசத்தில் இரண்டு வீரர்கள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Archaeologists

வல்லுநர்கள் தற்போது அதிலுள்ள எழுத்தின் சாத்தியமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். 40 கிலோகிராம் எடையுள்ள இந்தக் கல் (88lb) காசா கொலராடா (ரெட் ஹவுஸ்) எனப்படும் கட்டிடக்கலை கலவையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லிஸ்பெத் பீட்ரிஸ் மெண்டிகட் பெரெஸால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பியனுக்கு முந்தைய நகரமான சிச்சென் இட்சாவில் உள்ள பிரதான பிளாசாவைச் சுற்றியுள்ள கட்டிடங்களில் காசா கொலராடா சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது.

இக்கல்லானது 800-களின் பிற்பகுதியில் அல்லது 900-களின் முற்பகுதியில் வளாகத்தின் நுழைவாயிலில் ஒரு வளைவில் அலங்காரத்திற்கென இருந்த ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

1,000-year-old

சாண்டியாகோ சோப்ரினோ பெர்னாண்டஸ் தலைமையிலான ஐகானோகிராஃபி நிபுணர்கள் குழு, இக்கல்லின் மையத்திலிருக்கும் 2 நபர்கள் பெலோட்டா வீரர்கள் என்று அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இறகு தலைக்கவசம் அணிந்துள்ளார், மற்றவர் அவரது எதிரியாக கருதப்படுகிறார்.தலையைச் சுற்றி பாம்புகள் சறுக்கிக்கொண்டிருக்கும் மனிதனும் பெலோட்டா வீரர்களுக்குப் பொதுவான பாதுகாப்புக் கவசத்தை அணிந்திருப்பதாகத் தெரிகிறது.

பெலோட்டா என்பது ஒரு பால்கோர்ட்டில் ரப்பரால் செய்யப்பட்ட கனமான பந்தைக் கொண்டு விளையாடும் ஒரு குழு விளையாட்டு. இது 3,000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது மற்றும் மெசோஅமெரிக்கா முழுவதும் விளையாடப்பட்டது.

 

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி