தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேங்காய் உடைத்து கொண்டாட்டம்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேங்காய் உடைத்து கொண்டாட்டம்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இரு பிரிவுகளாக பிரிந்து தனித்தனியாக செயல்பட்ட நிலையில் அதிமுகவின் பொது செயலாளர் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக போட்டியிட்டார். இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி செய்து பொதுச்செயலாளர் போட்டி செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதிமுகவின் 8வது பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை அறிவித்ததற்கு தமிழக முழுவதும் அதிமுக தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் காந்தி சாலையில் உள்ள தேரடி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடத்தி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
பின் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து சாலையில் செல்லும் வாகனங்கள் வழி மறைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் அதிமுக தொண்டர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவர் அம்மா, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வாழ்க என கோசங்கள் எழுப்பி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக
அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், பாலாஜி, கோல்டு ரவி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநெல்லி தயாளன், போக்குவரத்து பிரிவு துணைத் தலைவர் மனோகர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், முன்னாள் நகர பொருளாளர் ராஜசிம்மன், திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் வாசு, கோல்டு மோகன் உள்ளிட்டோர் உள்ளனர்.