தேசிய சாலையில் கொட்டப்பட்ட தக்காளி விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தோக்கவாடி பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் ஜீவா போன்ற விவசாயிகள் எடுத்து செல்லும் தக்காளியை இடைத்தரகர்கள் மூன்று ரூபாய்க்கு வாங்கி அதனை 30 ரூபாய்க்கு வெளி சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருவதால் விரக்தி அடைந்த விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு மூன்று மாதங்கள் பாதுகாத்து அறுவடை செய்த தக்காளியை அடிமாட்டு விலைக்கு கொடுப்பதை விட கால்நடைகளுக்கே உணவாக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டி சென்ற சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீரை வர வைத்தது.
(Visited 1 times, 1 visits today)