ஆசியா செய்தி

தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி கடந்த 13ம் திகதி தொடங்கி 23ம் திகதி வரை நடைபெறுகிறது. இதற்கு அதிரடி காட்டும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா, குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்தது.

இந்த நிலையில் தென்கொரியா-ஜப்பான் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-இயோல், ஜப்பானுக்கு பயணம் செய்து அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த உச்சிமாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தென்கொரிய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, காலை 7.10 மணிக்கு பியாங்யாங் நகரில் உள்ள சுனான் பகுதியில் இருந்து கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி