தி ஐ பவுண்டேஷன் லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அமைந்துள்ள தனது 18 கிளைகளில், 9 கிளைகள் அதிநவீன மற்றும் மேம்பட்ட லேசர் கருவி அமைப்பு கொண்டு லாசிக் சிகிச்சை அளித்து வருகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷன், கண் மருத்துவமனை, லாசிக் அறுவை சிகிச்சையில், பல நவீன தொழில்நுட்ப சிகிச்சை முறைகளை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமையை கொண்டது.லாசிக்,
ஸ்மைல் (SMILE) சிறு துவார லெண்டிக்குள் எக்ஸ்ட்ராக்ஷன்; கான்டூரா எனப்படும் டோபோகிராபியின் வழிகாட்டுதலின் பேரில் அளிக்கப்படும் சிகிச்சை உயர்தரமிக்க உள்விழி லென்ஸ்கள் போன்ற சிறந்த சிகிச்சை முறைகள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“இப்பகுதியில் 25 வருட லாசிக் அறுவை சிகிச்சையை தி ஐ ஃபவுண்டேஷன்,கண் மருத்துவமனை கொண்டாடுகிறது.
இது குறித்து பேசிய மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர், டாக்டர் டி. ராமமூர்த்தி, பல ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிறந்த பார்வை மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு பெருமையே என்றும்,
எப்பொழுதும் ஆதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உயர்தர சிகிச்சையை தொடர்ந்து வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறினார். லாசிக் அறுவை சிகிச்சையின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பல நிகழ்ச்சிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட கண்மருத்துவர்கள் கலந்து கொள்ளும் 2 நாள் மாநாடு ஏப்ரல் மாதம் ஒன்று மற்றும் இரண்டு தேதிகளில் கோவையில் நடைபெறுகின்றன.
மேலும் நோயாளிகள் பயன் பெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சமூக நலன் சார்ந்த முகாம்கள் மற்றும் லாசிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பயனாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் ஆகியவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.