திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி – மோடி நன்றி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதற்காக கேரள மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாக தெரிவித்த அவர் நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே ஒரே வழியென மக்கள் தீர்மானித்ததாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இது மேலும் அவர் மேலும் பதிவிட்டிருப்பதாவது,
“திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.





