இலங்கை செய்தி

திருகோணமலை விபத்து: டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி; இருவர் காயம்.

திருகோணமலை விபத்து (Trincomalee accident), சேருநுவர செய்திகள் (Serunuwara news), டிப்பர் விபத்து (Tipper accident Sri Lanka), தெஹிவத்தை விபத்து (Dehiwatta accident), இலங்கை தமிழ் செய்திகள் (Sri Lanka Tamil News

மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் இன்று புதன்கிழமை (31) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளதுடன் அந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டுள்ளது.

இதன்போது சேருநுவர -தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.சாமிக்க அசான் என்ற 21 வயது இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளான்.அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த 16,19 வயதுகளையுடைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர்கள் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் , உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!