தவறான வழியில் செல்பவர்கள் யாரும் வியாபாரிகள் இல்லை
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தலைவர் விக்கிரமராஜாவிற்கு
வியாபாரிகள் உற்சாகமாக வரவேற்று அளித்து ஒரு கி.மீட்டர் தூரம் மலர் தூவி அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட துணை தலைவராக சாய்சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரும், இணை செயலாளராக பாலமுருகன் உள்ளிட்ட 3 பெரும் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, வருகின்ற மே.5ம்தேதி வணிகர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வணிகர் உரிமை முழுக்க மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலின் முன்னோடியாக நடைபெறும்
இந்த வணிகர் மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.சமீப காலமாக வணிகர் மீது பிரியாணியில் நாய் கறி, பூனை கறி கல்லப்படம் என சில பேர் தவறாக சித்தரிக்கின்றனர்.
பிளாஸ்டிக் அரிசி, பூனை பிரியாணி, ரெயிலில் நாய் கறி வந்தது என வணிகர்களை பாதிக்கும் கருத்துகளை அவ்வபோது கூறி தான் வருகின்றனர். தமிழக வியாபாரிகள் தரமான பொருட்களை மட்டும் தான் விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.
என்றுமே வியாபாரிகள் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள்; தவறான வழியில் செல்லுபவர்கள் யாருமே வியாபாரிகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.இதில் மாவட்ட தலைவர் இந்திரஜித், மாவட்ட இளைஞரணி பொருப்பாளர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.