தற்போதைய மிதமிஞ்சிய வெப்பநிலையால் சிறுவர்கள், கர்பிணிகளுக்கு ஆபத்து!
இலங்கையில் தற்போது காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகள்> கர்ப்பிணித்தாய்மார்கள் முதியவர்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கைமருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தள்ளார்.
அதேநேரம் அவ்வாறானவர்களுக்கு நீரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆபத்தை எதிர்கொள்பவர்கள் பகலில் வெளியே செல்வதை முடிந்தளவிற்கு தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடுன், 2.5லீற்றர் நீரை அருந்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலநிலையை கருத்தில்கொண்டுள்ள தொழிலாளர்கள் பணிபுரியும் நேரத்தை நிறுவனங்கள் மாற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)