தமிழரசுக் கட்சிக்கள் உள்ளக மோதல்: ஸ்ரீதரனை குறிவைக்கும் சுமந்திரன்!
இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ITAK சுமந்திரன் Sumanthiran மற்றும் சிறிதரன் S iridharan ஆகியோருக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
இருவரும் வெளிப்படையாக மோதிக்கொள்ளாவிட்டாலும் கட்சிக்குள் வெட்டு குத்து படலம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
“ நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி, சிறிதரனுக்கு தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது.
அவர் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அரசியல் குழு இரண்டு தடவைகள் ஆலோசனை வழங்கியிருந்தது.
கட்சியின் எந்த உயர் சபை அவருக்குப் பதவியை வழங்கியதோ, அந்தச் சபையின் ஆலோசனையை அவர் நிராகரித்ததால், அந்தப் பதவியை அவரிடமிருந்து மீளப் பெறத் தீர்மானித்துள்ளோம்.” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பு பேரவையில் அரசாங்கத்துக்கு சார்பாக ஸ்ரீதரன் செயல்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறீதரனைப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும், இதுவரை எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தான் பதவி விலகப்போவதில்லை என ஸ்ரீதரனும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.





