தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவு!
தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவு!
தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றின் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்கள10ரில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று கடந்த 9ஆம் திகதி ஊருக்கு திரும்பியுள்ளார்.
பின்னர் அவர் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து உயிரிழந்த இளைஞருடன் கோவா சென்ற 4 பேர் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் உயிரிழந்த குறித்த இளைஞருக்கு இணைநோய்கள் ஏதும் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,618ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். பொது இடங்களில் நடமாடும் மக்கள் மாஸ்க் அணிவதன் மூலம் தங்களை தற்காத்துக்கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.