டன் கணக்கில் ஐஸ்கிரீம் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
தமிழகத்தில்
அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தாகத்தை போக்க தண்ணீர் பந்தல்களை திறந்து வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் டன் கணக்கில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர்,நுங்கு, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம், அண்ணாச்சி, உள்ளிட்ட பழ வகைகளும்மோர், கரும்புச்சாறு, ஐஸ்கிரீம், உள்ளிட்டவைகளை வகை வகையாக வைத்து மிகப்பெரிய பழ மண்டி போல தண்ணீர் பந்தல் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், ஆகியோர் கலந்து கொண்டு பிரம்மாண்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகளையும் பழரசங்களையும் வழங்கி பொதுமக்களின் கோடை வெயிலின் தாகத்தை தணித்தார்கள்.
தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் என திரளானோர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பழ வகைகளை போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்கள் ஒன்றைக் கூட விடாமல் அள்ளிச் சென்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடன் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், பாலாஜி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.