ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை – வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனியில் தற்பொழுது இந்த 49 யூரோ பயண அட்டை தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டையானது அமுலுக்கு வர இருக்கின்றது.
இந்நிலையில் 49 யூரோ பயண அட்டையை பல்கலைகழக மாணவர்களும் உபயோகிக்க முடியும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
49 யுரோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற டொஷ்லான் டிக்கட் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜெர்மனியில் நடைமுறைக்கு வருகின்றது.
இதேவேளையில் பல்கலைகழக மாணவர்கள் ஏற்கனவே செமஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற ஒரு பயண அட்டையை பாவணையில் வைத்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு இந்த 49 யூரோ பயண அட்டையை பயன்படுத்தலாமா? என்ற ஒரு கேள்வி இவ்வளவு காலமும் இருந்தது.
மார்ச் 23 ஆம் திகதி ஜெர்மனியின் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் ஒன்று கூடிய நிலையில் பல்கலைகழக மாணவர்களும் இந்த 49 யூரோ டிக்கட்டுகளை தற்காலிகமாக ஜெர்மன் முழுவதும் பாவிக்கலாம் என்று முடிவு ஒன்றை எடுத்து இருக்கின்றார்கள்.
இது தற்காலிகமான முடிவு என்றாலும் வெகுவிரைவில் இது நிரந்தரமான ஒரு முடிவாக மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.