ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடுகள் – வெளியான காரணம்

ஜெர்மனி நாட்டில் சட்ட விரோதமாக ஆட்சியை கவிழ்க்க முற்பட்டவர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்படுகின்றன.

அந்த வகையில் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் அங்கு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் ரைப்போகர் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது சட்டவிரோதமான முறையில் தற்பொழுது ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதாவது தமக்கு விரும்பிய ஒரு ஆட்சியை  நடாத்துவதற்காக  பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கன்றது.

இதேவேளையில் அண்மை காலங்களாக ஜெர்மன் பொலிஸார் மேற்கொண்ட  நடவடிக்கைகளின் பிரகாரம் இந்த அமைப்பினுடைய  முதன்மை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு இப்பொழுது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதேவேளை ஜெர்மனியின் பொலிஸார் ரைப்போகர் என்று சொல்லப்படுகின்ற அமைப்பினுடைய பிரதிநிதி ஒருவருடைய வீட்டுக்கு சென்று தேடுதல்  நடவடிக்கையை மேற்கொள்ள முனைந்த பொழுது பாடன்புடன்பேரக் மாநிலத்தில் றொயிக்லிங் என்ற நகரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பொலிஸார் இவ்வாறு சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுற்றி வளைப்பின் பொழுது இந்த வீட்டில் இருந்த குறித்த அமைப்பினுடைய உறுப்பினர்  ஒருவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியதாகவும் இதன் காரணத்தினால் நபரானவர் கைது செய்யப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரியவந்திருக்கின்றது.

 

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி