ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த அதிர்ச்சி
ஜெர்மனியில் தமிழர்கள் எஸன் நகரத்தில் அமைந்திருக்கின்ற படமாளிகை ஒன்றில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
6ஆம் திகதி எஸன் நகரத்தில் அமைந்திருக்கின்ற சினிமாக்ஸ் என்று சொல்லப்படுகின்ற படமாளிகையில் சில வன்முறை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது இந்த படமாளிகையில் பட காட்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த நிலையில் 40 இளைஞர்கள் எழுந்து அமைதியை சீர்குலைத்ததாக தெரியவந்திருக்கின்றது.
இதேவேளையில் இவர்களை அடக்குவதற்கு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அங்கு விரைந்து வந்து இளைஞர்களை அடக்கியு்ள்ளமை தெரிய வந்திருக்கின்றது.
இதேவேளையில் இது சம்பந்தமான ஒரு நடவடிக்கை ஏற்கனவே பிரேமெனிலும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது டிக்டொக் என்று சொல்லப்படுகின்ற சமூக வளைத்தளங்களில் இவ்வாறான நவீனமான முறையில் இவ்வகையாக காட்சிகளை பல இளைஞர்கள் பதிவிடுகின்றார்கள்.
டிக்டொக்கில் பதிவிடுவதற்காகவே இவ்வாறு இவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தற்பொழுது தெரிய வந்திருக்கின்றது.
இளைஞர்களிடையே காணப்படும் டிக்டொக் மோகம் காரணமாக இவ்வாறான நடவடிக்கைகள் பல இடங்களில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.