ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கடுமையான நெருக்கடி – மாணவர்கள் சிக்கலில்

ஜெர்மனியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பொழுது பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

மக்கள் சனத்தொகை அதிகமான நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் எண்ணாயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளையில் பல கல்வி கற்ற ஆசிரியர்கள் தொடர்ந்தும் ஆசிரியர் பதவியில் இருக்க விரும்புகின்றார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படிருக்கின்றது.

குறிப்பாக பாடசாலையில் பாடசாலை மாணவர்களுடைய வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறான சூழ்நிலையை ஆசிரியர்களால் எதிர்நோக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவர்களுடைய தொகை அதிகரித்து இருக்கின்ற காரணத்தினாலும் ஆசிரியர்களால் இதை சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளையில் தற்பொழுது இந்த மாநிலத்தில் உள்ள எதிர்கட்சியான spd கட்சியானது இந்த பற்றாக்குறையையும் மற்றும் ஆசிரியர்களுடைய குறைகளை போக்குவதற்காகவும் அரசாங்கமானது  கடுமையான சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் வேண்டி இருக்கின்றது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி