இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் அரச படையுடன் இடம்பெற்ற மோதலில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் படைகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து வடக்கே 160 கி.மீ தொலைவில் உள்ள லாவாலாங் காவல் நிலையப் பகுதியில் நக்சல்கள் மற்றும் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் (CRPF) கூட்டுப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சத்ரா மாவட்டத்தில் உள்ள லாவலாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலமு-சத்ரா எல்லைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த மோதலில் அரசாங்கப் படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி