ஜப்பான் பேரிடர் நிவாரண குழுவின் பணிகள் நிறைவு – இன்று நாடு திரும்புகின்றனர்
ஜப்பான் பேரிடர் நிவாரண (JDR) மருத்துவக் குழு, தங்கள் பணியை நிறைவு செய்து இன்று நாட்டிற்கு திரும்புகின்றனர்.
நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 31 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு டிசம்பர் 03 ஆம் திகதியன்று நாட்டை வந்தடைந்தனர்.
சிலாபம் பொலிஸ் மைதானத்தில் அவர்களால் நிறுவப்பட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்தியசாலை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ சேவையை அவர்கள் வழங்கினர்.
மேலும் அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இன்று காலை சுகாதாரச் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கைவை சந்தித்தனர்.





