செய்தி தமிழ்நாடு

சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு, கட்சியினர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரெளஃபன் நிஷார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக ஆக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் தமிழக அரசு ஒன்றிய பிஜேபி அரசின் உத்தரவுக்கிணங்க இதனை செயல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி