செய்தி தமிழ்நாடு

செல்போனை பிடுங்கி கட்சி நிர்வாகிகளிடம் கொடுத்த அமைச்சர் நாசர்

திருவேற்காடு நகராட்சிககுட்பட்ட பகுதியில் பூங்காவிற்கு பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பூங்கா பணிகள் தொடங்க பூமி பூஜை துவங்கி வைத்தார்.

பின்னர் பூஜை செய்து தீபாராதனை காட்டியபோது அருகே இருந்த திருவேற்காடு நகரமன்ற தலைவர் மூர்த்தி அவரது செல்போனில் பேசி கொண்டிருந்ததை கண்டு அமைச்சர் கோபம் அடைந்து நகரமன்ற தலைவரஜ் எச்சரித்தார்.

மீண்டும் நகர மன்ற தலைவரிடம் இருந்த செல்போனை அமைச்சர் செல்போனை பிடுங்கி அருகே இருந்த கட்சி நிர்வாகிகளிடம் கோபத்துடன் கொடுத்தார். இதனால் நகரமன்ற தலைவரின் முகம் அங்கு வாடியது.

பின்னர் பூமி பூஜை  முடிந்தவுடன் அங்கு இருந்த பொது மக்களுக்கு இனிப்பு  வழங்கிவிட்டு அடுத்த பணியை மேற்கொள்ள அமைச்சர் கிளம்பி சென்றார்

. அமைச்சர் பூமி பூஜைக்கு தீபாரதனை காட்டும் போது நகர மன்ற தலைவர் செல்போனில் பேசி கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த அமைச்சர் செல்போனை பிடிங்கி நிர்வாகிகளிடம்  கொடுத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!