சூடானில் இருந்து தமது குடிமக்களை வெளியேற்றும் திட்டத்தை ரத்து செய்த ஜெர்மனி
ஜேர்மன் செய்தி நிறுவனத்தின்படி சூடானில் இருந்து ஜேர்மன் குடிமக்களை வெளியேற்றும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
“சூடானில் நடக்கும் சண்டையை மத்திய அரசு மிகக் கடுமையான முறையில் கண்டிக்கிறது. குறிப்பாக பொதுமக்கள், இராஜதந்திரிகள் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையின் அளவைக் கண்டு நாங்கள் திகைக்கிறோம்,” என்று அரசாங்கத்தின் துணைப் பேச்சாளர் Wolfgang Büchner பேர்லினில் கூறினார்.
தலைநகரின் பாதுகாப்பு நிலைமை காரணமாக கார்ட்டூமுக்கு இராணுவ விமானங்களை அனுப்புவதற்கான திட்டம் நிறுத்தப்பட்டது என்று டிபிஏ தெரிவித்துள்ளது.
மூன்று A400M இராணுவ போக்குவரத்து விமானங்கள் ஹனோவர் அருகே உள்ள Wunstorf ல் இருந்து ஜேர்மன் குடிமக்களை ஏற்றிச் செல்வதற்காக அதிகாலையில் கார்டூம் விமான நிலையத்தில் புறப்பட்டுச் சென்றன.





