சூடானில் இன்னும் அதிகமான மரணங்கள் ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சூடானில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சூடானில் ராணுவத்துக்கும் அதன் எதிர்த்தரப்பான RSF படையினருக்கும் இடையே சண்டை நீடிப்பதால் சுகாதாரச் சேவைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நோய்ப்பரவல் அபாயமும் உணவு, குடிநீர்த் தட்டுப்பாடும் பொதுச் சுகாதாரத்துக்குக் கடுமையான மிரட்டலாய் அமைந்துள்ளன என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் சுட்டினார்.
தலைநகர் கார்த்தூமில் (Khartoum) 16 விழுக்காடு மருத்துவ நிலையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. முறையான முதலுதவி கிடைத்திருந்தால் உயிரிழந்தோரில் கால்வாசிப் பேரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
வீதிகளில் வன்முறை தொடர்வதால் காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி செய்ய இயலவில்லை. இரண்டு வாரமாக நீடிக்கும் சண்டையில் சுமார் 460 பேர் உயிரிழந்துள்ளனர்.