சுவிட்சர்லாந்தில் மதுரோவின் சொத்துக்கள் முடக்கம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
சுவிஸ் பெடரல் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்தத் தடையானது தற்போதைய வெனிசுலா அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பாதிக்காது என்றும், முடக்கப்பட்ட நிதிகள் எதிர்காலத்தில் வெனிசுலா மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படும் என்றும் சுவிட்சர்லாந்து உறுதி அளித்துள்ளது.





