சுயநலவாத அரசியல் வாதிகளின் பின்னால் ஓடமுடியாது – பந்துல குணவர்த்தன!
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் கட்சியினர் நாட்டைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாகவுள்ளதாகவும் அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாதெனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாட தொழிலாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
ஹர்த்தால் போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.





