சீனாவுக்காக உளவு பார்த்ததாக தைவான் முன்னாள் எம்பி மற்றும் முன்னாள் அட்மிரல் மீது குற்றச்சாட்டு
தைவான் முன்னாள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே சந்திப்புகளை ஏற்பாடு செய்ததன் மூலம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக இரண்டு முன்னாள் அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த சந்திப்புகள் சீனர்கள் தங்கள் வலையமைப்பில் முன்னாள் இராணுவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும், பணியமர்த்தவும் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஜோடி 2013 முதல் 2018 வரை 48 முன்னாள் அதிகாரிகளுக்கு சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு 13 இலவச பயணங்களை ஏற்பாடு செய்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
சீனாவுக்காக உளவாளிகளை ஆட்சேர்ப்பு செய்வதை அந்த நபர்கள் முன்னதாக மறுத்தனர்.
ந்திப்புகள் தைவானுடன் சீனாவின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தன என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் ஹ்சியா ஃபூ-ஹ்சியாங் மற்றும் முன்னாள் எம்பி லோ சிஹ்-மிங் ஆகியோர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
சீனா சுயமாக ஆளப்படும் தைவானை பிரிந்து செல்லும் மாகாணமாக கருதுகிறது மற்றும் தேவைப்பட்டால் பலவந்தமாக அதை தனது கட்டுப்பாட்டில் வைப்பதாக சபதம் செய்துள்ளது.