சில மணி நேரங்களில் விற்று தீர்த்த கோத்தாவிக் புத்தகம்
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ எழுதிய ‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றிய சதி’ என்ற புத்தகம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை வெளியான இந்தப் புத்தகம் மதியத்திற்குள் விற்றுத் தீர்ந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நூல் இன்று (07) முதல் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் முன்னணி புத்தகக் கடைகளில் கிடைக்கும்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கலந்துரையாடலில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் சில வலுவான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தற்போது அறியமுடிகின்றது.
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் போட்டியிடுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.