ஆசியா

சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்!

சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று வான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் அலேப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேலினால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தொழில்நுட்பவியலாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என சிரியாவின் போக்குவரத்து அமைச்சு அதிகரி சுலைமான் கலீல் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய வளாகத்தில் உள்ள ஈரானிய ஆதரவுப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 7 ஆம் திகதியும் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மூவர் உயிரிழந்ததுடன்இ விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!