சிட்னி பயங்கரவாத தாக்குதல்: விசாரணைக்கு FBI யும் ஒத்துழைப்பு!
ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இது தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்கா எப்.பி.ஐ. இயக்குநர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவால் கோரப்பட்ட உதவிகளை வழங்குவோம். எங்களால் முடிந்தவரை கூடுதல் தகவல்களை வழங்குவதற்கு முயற்சிப்போம் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தை அடுத்து இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரை, ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் தொடர்பு கொண்டு விளக்கியுள்ளார்.
மேலும் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணத்தையும் அவர் இரத்து செய்துள்ளார்.
அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் இன்று சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட காயமடைந்த 42 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
50 வயது தந்தையும், 24 வயது தந்தையுமே யூத சமூகத்தை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
50 வயது தந்தை உயிரிழந்துவிட்டார். காயமடைந்த நிலையில் 24 வயது மகன் பொலிஸ் காவலில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.





