சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக லொரிகள் சிலவற்றில் கட்டாய வேக வரம்புச் சாதனம் பொருத்துவது குறித்த தகவல்கள் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. 3,500 கிலோகிராமுக்கு மேல் பாரம் ஏற்றும் லொரிகளில் வேக வரம்புச் சாதனம் பொருத்தவேண்டும்.
அத்தகைய வாகனங்களில் பயணம் செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை அது வலுப்படுத்தும். ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லொரிகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அது குறித்து ஆராயப்படுகிறது.
சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் விரைந்து செயல்படவேண்டும் என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் Leon Perera வலியுறுத்தினார்.
வேக வரம்புச் சாதனங்களை மதிப்பிடவும், திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் போக்குவரத்துக் காவல்துறை கலந்தாலோசிப்பதாக உள்துறைத் துணையமைச்சர் Faishal Ibrahim கூறினார்.
உரிய மாற்றங்களைச் செய்து தொழில்நுட்பச் சோதனைகளை நிறைவுசெய்ய அவகாசம் தேவை என்று சம்பந்தப்பட்ட தரப்புகள் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.