ஆசியா செய்தி

சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை!!! புதன்கிழமை தூக்கு

ஒரு கிலோ அளவுக்கு கஞ்சாவை கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் ஒருவர் அடுத்த வாரம் தூக்கிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் சிங்கப்பூரில் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும். 46 வயது தங்கராஜு சுப்பையாவுக்கு எதிர்வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

குறித்த தகவலை சிறை அதிகாரிகள் தரப்பு தங்கராஜுவின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமைக் குழுக்கள் சிங்கப்பூருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. தங்கராஜு கடந்த 2017ல் 1,017 கிராம் அளவுக்கு கஞ்சா கடத்தல் சதி திட்டத்திற்கு தூண்டப்பட்டார் என கூறப்படுகிறது.

அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கிய தங்கராஜுவுக்கு 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயினும், சிங்கப்பூரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!