சஜின் வாஸ் குணவர்தன கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று காலை (09) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.




