“கோ ஹோம் ஹரிணி”: போராட்டத்தில் குதித்தார் விமல்!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டத்தை இன்று (12) Wimal Weerawansa ஆரம்பித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.
கொழும்பு, பத்தரமுல்ல, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்தில், விமலுக்கு ஆதரவாக அவரது கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
கோ ஹோம் ஹரிணி என்றெல்லாம் பதாகைகள் ஏந்தப்பட்டுள்ளன.
புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.





