செய்தி தமிழ்நாடு

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரிக்கை

சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழா இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க கொடியை ஏற்றி வைத்து, காந்தி படத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் திறந்து வைத்தனர்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் பேசுகையில்,வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான முறையில் வணிகம் செய்வதற்கு தேவையான வழிமுறைகளை எடுத்து கூறினார்.. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது..
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தென் மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவையிலிருந்து செல்வதாகவும்,எனவே கோவை வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

(Visited 6 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!