இந்தியா செய்தி

கைலாசாவில் குடியுரிமை பெற பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்; நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு

சுவாமி நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகியதோடு அது தொடர்பிலான சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளது.

இதற்கிடையே கைலாசாவில் குடியுரிமை பெறவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு துஷ்ப்பிரியோக வழக்கில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.அத்தோடு கைலாசாவை சுற்றிப்பார்க்க உலக பக்தர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்ட நிலையில் நித்தியானந்தாவின் நகைச்சுவை பேச்சு காரணமாக அவருக்கு பக்தர்களைவிட அதிகமாக ரசிகர்களும் உருவாகினர்.

இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா வின் பொருளாதார, சமூக, மற்றும் காலாசார உரிமைகள் குழு கூட்டத்தில் ‘கைலாசா குடியரசு சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர்.இது தொடர்பிலான புகைப்படங்கள் நித்தியானந்தாவின் சமூகவலைத்தல பக்கங்களில் வெளியிடப்பட்டன. ‘முடிவெடுக்கும் விடயங்களில் பெண்களுக்கு சம உரிமை என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அனைத்து மகளிர் குழு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

 

அதில் பங்கேற்ற பெண் பிரதிநிதிகள் நிலையான வளர்ச்சிக்கு கைலாசா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் உணவு, இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை போன்றவை கைலாசாவில் இலவசமாக வழங்கப்படுகிறது.பழமையான இந்துமத பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வர விரும்பும் இந்து மத தலைவர் நித்யானந்தாவுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது.சொந்த நாட்டிலேயே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததோடு இந்த தொந்தரவை தடுத்து நிறுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.ஆனால் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதித்துள்ளது.

இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியிருந்தார்.இதனிடையே கற்பனையான நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்படி அனுமதி அளித்தது போன்ற கேள்விகள் பரவலாக எழுந்தன.இதற்கு ஐ.நா, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் பேச அனுமதி அளிக்கும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது நித்தியானந்தா தன்னுடைய நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமையை தனது பக்தர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு அவரது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக  கூறப்படும் நிலையில் அவரது பக்தர்கள் கைலாசா நாட்டின் குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி