குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபணமாகும்வரை அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகியிருப்பதாக மனீஷ் சிஸோடியா அறிவிப்பு

இந்தியத்தலைநகர் புதுடில்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிஸோடியா ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதைத்தொடர்ந்து, அவர் அனைத்து அமைச்சுப்பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என நிரூபணமாகும் வரை தான் அமைச்சுப்பொறுப்புக்களிலிருந்து விலகியிருப்பதாக மனீஷ் சிஸோடியா அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிஸோடியா, மதுபானம்சார் கொள்கை தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
இருப்பினும் அவரும், அவரது ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளும் அக்குற்றச்சாட்டை மறுத்திருக்கும் நிலையிலேயே, மனீஷ் சிஸோடியா அனைத்துப் பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)